தமிழகத்தில் ஆட்சியில் பங்கும் கூடுதல் தொகுதிகளையும் கேட்டு காங்கிரஸ் கோரிக்கை வைத்து வந்ததால், திமுக உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகின்றன. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நடத்திய பேச்சுவார்த்தை சோடை போன நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணக்கமான நட்பு கொண்டுள்ள மூத்த தலைவர் பா.சிதம்பரத்தை களமிறக்க சோனியாவும் கார்கேவும் முடிவெடுத்தனர். சிதம்பரத்துடன் அவர்கள் வீடியோ காலில் பேசியதாகவும், அப்போது தான் மட்டும் தனியாக சென்று முதலமைச்சரை சந்திக்க விரும்புவதாக கண்டிஷன் போட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தேசிய தலைமை திமுக உடனான கூட்டணியை தொடர்பு விரும்புவதாக முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 25 இடங்களை வழங்க திமுக முன்வந்திருந்த நிலையில் பா.சிதம்பரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு 28 தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தற்போது காங்கிரஸ் 31 இடங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டோர் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. திமுகவுடனான கூட்டணியில் இழுபறி இல்லை என தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸுக்கு எந்த கெடுவையும் திமுக விதிக்கவில்லை என கூறியுள்ளார். முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மேலிட முடிவு செய்யும் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் உடனான பேச்சு வார்த்தையை முதலமைச்சர் சுமூகமாக முடிப்பார் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இடங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!
இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!