சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது கோடிக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் செயல் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முதன்முதலில் பீகார் மாநிலத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டபோதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டபோது கட்சி தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பியது. மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது என்றும், அவர் இனி பதவியில் தொடர உரிமையில்லை என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!
நேற்று நாங்கள் சொன்னபோது அவதூறு... இன்று நீங்கள் சொன்னால் தீர்மானமா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். அரசியலில் ஈகோவைவிட ஜனநாயகம் பெரிது என்பதை உணர்ந்திருந்தால், இந்தத் தீர்மானம் இன்னும் முன்னரே வந்திருக்கலாம்; தாமதமாக வந்தாலும், பரவாயில்லை. தாமதமாக வந்தாலும் ஞானேஷ் குமாருக்கு எதிராக எடுத்த இந்த நிலைப்பாட்டை தொடரவேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பஞ்ச் பேசும் நடிகர் எங்கே போனார்? முதல்வர் விஜய்யையும் காங்கிரஸையும் வறுத்தெடுத்த தயாநிதி மாறன்!