• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!! கம்யூனிஸ்ட்டுகள் களம் காணாத கோவை எலெக்‌ஷன்!!

    வரலாற்றில் முதல் முறையாக, கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் காணாத தேர்தலாக, இந்த சட்டமன்ற தேர்தல் அமைந்துள்ளது.
    Author By Pandian Thu, 02 Apr 2026 12:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Historic First in Coimbatore: No Communist Parties Contesting Tamil Nadu 2026 Assembly Elections – End of an Era in Kovai Politics!

    கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான கோவையில் ஒரு காலத்தில் தொழிலாளர் இயக்கத்தின் மையமாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலுவான கோட்டையாகவும் இருந்த பகுதியில் இந்த மாற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த பல தசாப்தங்களாக கோவை எம்.பி. தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்தன. கோவை கிழக்கு, பேரூர், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலமுறை வெற்றி பெற்றுள்ளனர். பார்வதி கிருஷ்ணன், உமாநாத், ரமணி, பாலதண்டாயுதம் போன்ற முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோவையை தங்களது அரசியல் களமாகக் கொண்டு செயல்பட்டவர்கள்.

    ஆனால் காலப்போக்கில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்த முறை மாநில அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெறும் ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிலும் கோவை மாவட்டத்தில் எந்தத் தொகுதியும் கிடைக்கவில்லை. இதனால், கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: கோவையில் வெளியூர் வேட்பாளர்கள் வென்றதே இல்லை?! வரலாற்றை மாற்றி எழுதுவாரா செந்தில் பாலாஜி!!

    CoimbatoreElections

    கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு கூட்டணிச் சிக்கல்களை முக்கிய காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் அரசியல் விமர்சகர்கள் வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். “வறட்டு சித்தாந்தத்தைப் பிடித்துக் கொண்டு மக்களின் மாறிய எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாதது, தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய விழிப்புணர்வு, தொழில் மாற்றங்கள் ஆகியவைதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில் ஒரு காலத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்தன. ஆனால் இப்போது அந்த இயக்கங்கள் பலவீனமடைந்து, புதிய அரசியல் சக்திகள் முன்னுக்கு வந்துள்ளன. இந்த மாற்றம் கோவை அரசியல் களத்தை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த விலகல் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கோவை போன்ற தொழில் நகரங்களில் இடதுசாரி அரசியலின் செல்வாக்கு குறைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலத்தைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

    இதையும் படிங்க: கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share