தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா. இவரது கணவர் துவாரக நாதன் இவர்கள் குடும்பத்துடன் செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 21.11.25 மதியம் 1:30மணி அளவில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு இன்னோவா காரில் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
இதையும் படிங்க: "கொத்து, கொத்தாக நீக்கப்படலாம்"... திமுகவினரை எச்சரித்த அமைச்சர் ஐ.பெரியசாமி...!
பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
இதே போல் வத்தலகுண்டு அருகேயுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தப்படுகிறது. இவரது மகள் இந்திரா என்பவரது திண்டுக்கல் வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன் என்பவருக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த கே.சிங்காரக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியில் உள்ளது.
இந்த, கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளி மாநிலம் வெளிநாடுகளுக்கு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் மதியம் 2 மணி முதல் கே.சிங்காரக்கோட்டை அடுத்த ஒட்டுபட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் இரண்டு கார்களில் சுமார் 10 ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நிறுவனத்திற்குள் சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு கோப்புகளை எடுத்து ஜி.எஸ்.டி. வரவு செலவுகளை கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்து வரும் நிலையில் அங்கு வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்து உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அவர் மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி வீடுகள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்தனர். இதில் இந்திராணியின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!