திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சாதி வாரிய கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைய விவாதம் நடந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை, மாநில அரசு எடுக்க வேண்டுமா, மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தை வட மாநிலங்களோட கம்பேர் பண்ணாதீங்க - வானதி ஸ்ரீனிவாசன் வேதனை...!

மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள எல்லையில் துறைமுகம் திறக்கப்பட்டதால் நமக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக துறைமுக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் வர இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணியில் கட்சிகள் சேர்வது குறித்து அப்போது தெரியவரும். மத்திய அரசின் அறிவிப்புக்கு கேரள முதல் மந்திரியே பாராட்டி தான் பேசியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் கட்சியை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கிறது. அப்போது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திருவல்லிகேணியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்தார்கள். தமிழ்நாடு அரசு எல்லாவற்றிக்கும் தடை விதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில யாருக்கும் பாதுகாப்பு இல்ல..! சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு.. நயினார் கடும் தாக்கு..!