ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான எண்பத்து நான்கு வயது வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஜெம் வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் எழுந்த நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வீரமணியின் பாலியல் வீடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டி பணம் பறிக்க சொன்னார்கள் என்று தெரிவித்தார். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஜான் பாண்டியன் விளக்கம் கொடுத்துள்ளார். 20 கோடி ரூபாய் வாங்கி தருமாறு ரஞ்சன் குமாரும் சாந்தியும் கூறியதாகவும் நான் முடியாது என்று கூறிவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சாந்தி யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ரஞ்சன் குமார்வுடன் மட்டுமே பழக்கம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு அசிங்கமான விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டு அங்கிருந்து தான் சென்று விட்டதாகவும் கூறினார். வீரமணியை மிரட்டி பணம் பறிக்க தான் சாந்தி திட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார். வீரமணியை தெரியும் அவ்வளவுதான் என்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி என்னிடம் கூறுவார் என்றும் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: பாரபட்சமில்லாத விசாரணை..! சிறுமிகளை சீரழித்த கொடுமை.! வீரமணி விவகாரத்தில் வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!
ரஞ்சன் குமார் அழைத்து வரும் வரை சாந்தி யார் என்று தனக்கு தெரியாது எனவும் ஒரு அரசியல் தலைவர் சொல்லி தான் ரஞ்சன் தன்னை பார்க்க வந்தார் எனவும் கூறியுள்ளார். வீரமணியின் வீடு எங்கு இருக்கிறது என்பது கூட தனக்கு தெரியாது என ஜான்பாண்டியன் குறிப்பிட்டார். காவல்துறை விசாரித்தால் பதில் சொல்ல தான் தயாராக இருக்கிறேன் என்று கூறிய ஜான்பாண்டியன், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!