விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் "சமத்துவம் பழகு" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாஸ் பேச்சின் முக்கிய பகுதிகள்: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததன் நோக்கம் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற விடாமல் தடுப்பது தான் என்று டிடிவி தினகரன் மாறி மாறி பேசி வருவதை சுட்டிக்காட்டினார். "தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை. நீங்கள் அடிக்கும் விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் என்னிடம் எண்ணிக்கையில் உள்ளது" என்று கூறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) கிண்டலடித்தார்.
மேலும், "கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வர வேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வருமான வரி கட்டாததை தமிழக மக்கள் மறக்கவில்லை" என்று விஜய்யை நேரடியாக சாடினார்.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? மோடிக்கு அடிபணிந்துவிட்டது அதிமுக? கு.ப.கிருஷ்ணன் கொந்தளிப்பு!

டிடிவி தினகரன் குறித்தும் கருணாஸ் விமர்சனம் வைத்தார். "இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சிக்கு வரவிட மாட்டேன் என்று கூறிய தினகரன் இன்று ஒன்றுமில்லை என்று சொல்கிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கை" என்றார்.
பாஜகவை கடுமையாக தாக்கிய கருணாஸ், "படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத் தாமரை குளத்துக்கு நாசம். பாஜகவின் தாமரை நாட்டுக்கே நாசம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வர முடியாது" என்று உறுதியாகக் கூறினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக, அதிமுக, பாஜக தரப்பில் இருந்து இதற்கு பதில் வருமா? 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடிகர்கள் இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் ஜீரோ!! தனியா நின்னா மதிப்பில்லை! அரசியல் அனுபவம் பத்தாது!! விளாசும் தமிழிசை!!