தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை தள்ளுபடி செய்யப்பட்டது.

SIT- ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு, சிபிஐ விசாரணை உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனைத் தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, SIT விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழக அரசு அமைத்த தனிநபர் ஆணையம் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது. கரூர் சம்பவம் சிபிஐ க்கு மாற்றப்பட்டு இருப்பதால் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!