• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம் – பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 07:42:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madhuranthagam Dharapuram vote counting

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுராந்தகம்: 

    கடந்த 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.

    இதையும் படிங்க: “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரையில், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

    கடந்த தேர்தலைவிட இந்த இடைத்தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 86 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

    இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகி, தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுவதாகவும், இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

    இந்தச் சூழலில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிந்துகொள்ளத் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 285 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

    பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுதப்படையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் காலை 8 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளாத முதலமைச்சர்கூட மதுராந்தகம் தொகுதியில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார்.

    திமுக தரப்பில் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தொடர்ந்து மூன்று நாட்கள் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து மூன்று நாட்கள் மதுராந்தகம் பகுதியில் பிரசாரம் செய்தார். இதேபோல் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும், நாம் தமிழர் கட்சியின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் பிரசாரங்களின்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் அரசு அலுவலர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் அனுமதிச் சோதனைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குதிரை பேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், தவெக ஆட்சியின் கடந்த நான்கு மாத காலச் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நிலவும் கருத்துகள் ஆகியவை இந்தத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் அந்தந்தத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளுடன் மட்டுமல்லாமல், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதால், இந்த வாக்கு எண்ணிக்கையைத் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரையில், திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் கடந்த மூன்று நாட்களாகச் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளைச் சரிபார்த்து, முழுமையான சோதனைக்குப் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    அனுமதி அட்டை வைத்திருக்கும் பணியாளர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன்களைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

    தாராபுரம் தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்தத் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,79,214 பேர் வாக்களித்துள்ளனர். இது 80.25 சதவீத வாக்குப்பதிவாகும்.

    தாராபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், ஓர் உதவியாளர் மற்றும் மத்திய அரசு பணியிலுள்ள நுண் பார்வையாளர் என மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்குகள் மூலம் வாக்களித்துள்ளனர். காவல்துறையினரில் 175 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணியளவில் இருந்து முன்னிலை நிலவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியேயும் பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மையத்தில் மொத்தம் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 14 மேஜைகளிலும் தனித்தனியாகக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்கு எண்ணும் பணி முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது.

    வாக்கு எண்ணும் பணியைத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    தற்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கான சோதனைகள் முடிக்கப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் முடிவுகளையும் அறிந்துகொள்ளத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

    இதையும் படிங்க: ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share