மதுரை: தமிழகத்தின் தெற்கடி இதயமான மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற “தமிழ்நாடு வளர்கிறது” முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் பெரும் உற்சாகத்துடன் துவங்கியது.
91 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தான இந்த நிகழ்வு, ரூ.36,660.35 கோடி முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்தது. இதன் மூலம் 56,766 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.11,700 கோடி ஒப்பந்தம் இந்த மாநாட்டின் மிகப்பெரிய ஹைலைட் ஆக அமைந்தது.
நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் இல்லத் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பிறகு, நேராக முதலீட்டாளர்கள் மாநாட்டு மேடைக்கு வந்தார். உலகம் முழுவதிலிருந்தும் வந்த தொழிலதிபர்கள், தமிழகத்தின் தொழில் நட்பு சூழலைப் பாராட்டி, ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்த 91 ஒப்பந்தங்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மதுரைக்கு புத்தம் புது இறக்கை!! வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்!

நிகழ்ச்சியில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “வேலை வைத்து அரசியல் செய்ய துடிப்போருக்கு நடுவே, வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில், 4 ஆண்டுகள் திமுக ஆட்சியில் முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. மதுரை மாவட்டத்திற்கு AI தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம்” என்று அறிவித்தார். இந்த வார்த்தைகள் மாநாட்டு அரங்கத்தை முழுவதும் உற்சாகத்தில் மூழ்கடித்தது.
இந்த முதலீடுகள் தமிழகத்தின் $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை நெருங்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கோவை, சென்னைக்குப் பிறகு மதுரையில் நடந்த இந்த மாநாடு, தமிழகத்தின் தொழில் பரவலாக்கத்திற்கு மைல்கல்லாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!