மதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா மீது ஏற்கனவே கட்சியினுடைய பொதுச்செயலாளர் வைகோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தார். மல்லை சத்யாவிடம் இது தொடர்பான விளக்கம் 15 நாட்கள் அனுப்ப வேண்டும் என ஏற்கனவே வைகோ குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக மதிமுகவினுடைய பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலமாக வெளியிட்டிருக்கிறார்.
ஏற்கனவே மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வைகோ குறிப்பிட்டிருந்தார். ஆனால் மல்லை சத்யா கொடுத்திருந்த விளக்கம் ஏற்கக்கூடிய வகையில் இல்லை என்றும் அதேபோன்று கட்சியினுடைய விதிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகளுக்கு மீறி மல்லை சத்யா செயல்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ள வைகோ, தற்போது அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா கூறியதாவது: மதிமுக மகன் திமுகவாக மாறிவிட்டது.
தீர்ப்பை எழுதிவிட்டு போலியான விசாரணை நாடகம் நடைபெற்றது.
இதையும் படிங்க: #BREAKING மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்... வைகோ அதிரடி அறிவிப்பு...!
32 ஆண்டு எனது உழைப்பை உத்தரவிட்டார். ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைத்து தற்காலிக நடவடிக்கை எனபது வேடிக்கையாக உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு, மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைகோ கூறி இருக்கிறார். ஆனால் மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு இல்லை.
இடைக்கால நடவடிக்கை எடுத்தபோது அந்ந குழு எங்கே சென்றது. தனது மகனுக்காக இந்த இயக்கத்தை பாழ்படுத்தி விட்டார். தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றும் மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மல்லை சத்யாவுக்கு அவ்ளோ தான் டைம்... கெடு விதித்த வைகோ! பதில் சொல்லலனா...