நெல்லை பேட்டை பகுதியில் மதிமுக நிர்வாகி ஒருவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்றிருந்தார். அதன் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி பங்கேற்றார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி வலுவாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல் எதுவும் இல்லை என்றார்.
கடனைப் பொறுத்தவரை அரசாங்க தலைமை மாறும்போது இன்றைக்கு இருக்கும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கடன்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நல்ல விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். தமிழக அரசு கடன் அதிகமாக வாங்குவதற்கு காரணம் நான்கரை ஆண்டுகளில் அதிக பேரிடர் நடந்துள்ளது. அப்பொழுது ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. மக்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஏற்படும்பொழுது மாநில அரசு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
கலைஞர் மகளிர் உதவி திட்டத்தில் ஒரு கோடிக்கு அதிகமான பெண்கள் பயனடைகிறார்கள். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டமாக இருக்கட்டும் பல்வேறு திட்டங்களாக இருந்தாலும் எளிய மக்கள் அனுபவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு காரியத்தை சாதித்த துரை வைகோ... திமுக சதி வலையில் இருந்து தப்பிய மதிமுக...!
எங்களுக்கு எவ்வளவு தொகுதி வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும்.அதை நோக்கி எங்கள் பயணம் தொடரும். கூட்டணி விவகாரம் குறித்து பரபரப்பை உருவாக்க நான் நினைக்க விரும்பவில்லை.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மறுபடியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
4 அணிகள் தற்போது களத்தில் இருக்கின்றன.விஜய்க்கு ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அவர் அரசியல் வருகை எங்களது எதிர்க்கட்சியினுடைய ஓட்டுகளை பிளவுபடுத்த தான் அவரது முயற்சி செய்யும். நாட்டு மக்களே எள்ளி நகையாடும் நிலை டிரம்பின் நடவடிக்கை இருக்கிறது. முனைப் போட்டி திமுகவிற்கு தான் சாதகமாக அமையும்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு உண்டான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். நடிகர் விஜய் கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் தான் உயிர் இழப்புக்கு காரணம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியினர் தான் காரணம் என கூறுகின்றார்களே என்ற கேள்விக்கு, கரூர் விஜய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்பது எனது கருத்து. அதனுடைய இறுதி அறிக்கை வந்த பிறகு தான் சம்பவம் எதனால் நடந்தது யார் காரணம் உள்நோக்கம் இருக்கா சதியா எல்லாமே தெரியும்.
கரூர் சம்பவம் போன்ற கூட்டங்களில் உயிரிழப்புகளை தடுக்க இறுதித் தீர்வு என்னவென்றால் நிகழ்வு நடத்துபவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருக்க வேண்டும். கரூர் போன்ற கூட்டங்களில் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க மக்கள்தான் காரணம். மக்கள் விழிப்புணர்வுக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: “ச்சீ...ச்சீ... இந்த பழம் புளிக்கும்...” - தவெகவை கை கழுவியதா அதிமுக? - முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!