தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் " கல்வியில் சிறந்த தமிழ்நாடு " எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது சிலர், “எங்களுக்கு சோறு போடும் ஸ்டாலின் அப்பாவுக்கு நன்றி” என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோர்களும், “காலை உணவு திட்டத்தின் மூலம் இனி எங்கள் குழந்தைகள் பட்டினியாக பள்ளி செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறது” என நன்றியுரை தெரிவித்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, பள்ளி குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சுவைத்தார்.மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் அனுபவங்களை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, திமுக அரசு கல்வியில் செய்து வரும் மாற்றங்களை நேரடியாக வெளிப்படுத்தியது.
தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டம் மூலம் பயனடைந்த பெண் ஒருவர், தனக்கு இந்தத் திட்டம் எந்தளவுக்கு உதவியது என்பதை விளக்கி நெகிழ்ச்சியாகப் பேசினார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் அந்தப் பெண் பேசியதைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் வயிற்றில் பால் வார்த்த அன்பில் மகேஷ்... 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சொன்ன குட்நியூஸ்...!
அதேபோல் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட உருக்கமான விஷயங்களைக் கேட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: “எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கிறோம்...” - மாணவர்களுக்கு தெம்பூட்டிய அன்பில் மகேஷ்...!