அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 15 நாட்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
நெல் முட்டைகள் முளைத்திருந்தன. அவற்றை எங்கள் கண் எதிரிலேயே நாங்கள் பார்த்தோம். தினமும் நெல் முட்டைகள் கொள்முதல் நடந்திருக்கும் என்றால் திறந்த வெளியில் அவை இருந்திருக்காது. தினசரி 2 ஆயிரம் நெல் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால் அவை தேங்கியிருக்காது. ஆனால், தினமும் 2 ஆயிரம் நெல் முட்டைகள் கொள்முதல் என அமைச்சர் தவறான தகவலை கூறியிருக்கிறார். நெல் கொள்முதல் மையங்களை பார்க்காமல், ரெயிலில் மூட்டைகள் ஏற்றப்படும்போது அதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்தால் பிரச்சனையாகும் என்று அவர்களை சந்திக்காமலே உதயநிதி ஸ்டாலின் சென்று விட்டார். நெல் கொள்முதலை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால், நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறுகிறது. அத்தனையும் பொய் என தி.மு.க. அரசை கடுமையாக சாடினார். 
இதையும் படிங்க: பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!
இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் இந்த வருடம் மூன்று மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிமுகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் 1.79 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திமுக ஆட்சியில் 2024-25 ஆண்டு 47 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தில் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதாகும்.
திமுக ஆட்சியில் 2021-2025 தற்போது வரை 1.96 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு குறைவான அளவிலே நெல் கொள்முதல் செய்துள்ளதாக தவறான தகவல் கூறுகிறார். முதல்வர் குறித்து அவதூறு பரப்புகிறார். சனல் இல்லை சாக்கு பை இல்லை என எடப்பாடி பழனிசாமி  தெரிவிக்கிறார்.
கொல்கத்தாவில் இருந்து சனல் மற்றும் சாக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்கி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் அப்பட்டமான பொய் கூறி வருகின்றனர். தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அதனை வழங்குமாறு அவர்களிடம் கேட்டும் இதுவரை அதற்கான பதிலை கூறவில்லை அவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது. 
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'விண்டெர்ஜி இந்தியா 2025' கருத்தரங்கத்திற்காக வருகை தந்திருந்த ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு. உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக அதிகரித்து நெல் கொள்முதல் செய்திடவும், செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலப்பதற்கான தரச்சான்றினை விரைந்து வழங்கிட ஆவன செய்திடக் கேட்டுக் கொண்டதாக கூறினார்.உண்மை இப்படி இருக்க ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவலை கூறி வருகிறார் என குற்றம் சாட்டினார்.
டெல்டா மாவட்டத்தில் வரவுகோட்டை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் விவசாயி  நெல் விவசாயம் குறித்து வீடியோ எடுத்து தவறான தகவல்களை கூறியுள்ளார். பூங்கொடி 5 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகையை எடுத்து விவசாயம் செய்கிறார். தற்போது வரை நெல் அறுவடை செய்யவில்லை. அதிமுக கட்சி காரர்கள் தவறான தகவலை பரப்பி விவசாயிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்து கின்றனர்.
 சன்ன ரக நெல்லுக்கு ரூ.156, பொது ரகத்துக்கு ரூ.131 வீதம் தி.மு.க.,அரசு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. நாள்தோறும் 35ஆயிரம் டன், வெளிமாநிலங்களுக்கு நகர்வு செய்யப்படுகிறது. இதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில், 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளை அமைத்து நெல்லை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில்  நெல் கொள்முதல் தொடர்பாக, அதிமுகவினர் தவறான தகவலை பரப்பி விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 
தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் 183 இடங்களில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. எதிர்கட்சித் தலைவர் குறைகளை சுட்டிக் காட்டலாம். ஆனால், தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது' தமிழக முதல்வர் மீதும் திமுக அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: சசிகலாவுடன் OPS, செங்கோட்டையன் சந்திப்பு... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பெரும் எதிர்பார்ப்பு..!