விமர்சனம் மற்றும் உருவகேலியை விட்டுவிட்டு கொள்கை ரீதியாக என் பக்கத்தி லிருந்து என்னிடம் பேச முடியுமா? தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சவால்!- பெண்கள் முன்னேற்றம் என கூறும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் வீட்டி லுள்ள தங்கை கனிமொழியை முடக்குவதற்கு டெல்லியில் அமர வைத்தாரெனவும் விமர்சனம்!!
சிவகாசியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பங்கேற்றுப் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறும் போது :- 40, 50 ஆண்டுகள் ஆண்டுகொண்டிருந்த கட்சிகள் 30- நாட்கள் ஆண்டு கொண்டிருக்கும் நம்மைக் கேள்வி கேட்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் அரசு அலுவலகத்திற்கு சென்றால் 100,500, 1000 ரூபாய் லஞ்சம் கட்டினால் தான் எல்லா வேலையும் நடக்கும். 23 முதல் 24 சதவீத கமிஷன் தனியாக வாங்கி வைத்துக் கொண்டபின்னர்தான் அடுத்தகட்ட வேலையையே செய்வார்கள். ஜீரோ கரெப்சன் மாடல் கொண்டு வந்த எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறீர்களா?
இதையும் படிங்க: உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!
40, 50 ஆண்டுகள் சாம்ராஜ்யத்தை 30- நாட்களில் அழித்துக் காட்டியுள்ளோம். டெண்டர் மாபியாவை அழித்துள்ளோம். ரீல்ஸ் ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என்கிறார்கள். முதலீடு குறித்து நான் வெளியிட்ட ரீல்சை பயங்கரமாக கலாய்த்தார்கள். முதலீட்டை ஈர்க்கப் போவதாக மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக நீங்கள் குடும்பம்- குடும்பமாக வெளிநாட்டுப் பயணம் செய்தீர்களே! அப்பொழுது உங்களுக்குத் தெரியவில்லையா?
இன்றைக்கு நாங்கள் ரீல்ஸ் மூலமாக நிறுவனங்கள் கொண்டு வரவில்லை என்றாலும், எத்தனை இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்து டிக்கெட் புக் செய்து வந்து விஜய்யை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என வாக்களித்தார்.
வெளிநாட்டிலிருந்து விஜய்க்கு வாக்களித்துவிட்டு சென்றவர்கள் பணியாற்றும் அலுவலக முதன்மை அதிகாரிகளிடம் இப்படி ஒரு பாவக்கா ஆட்சியில் இப்படி ஒரு தொழில் துறை அமைச்சர் இருக்கிறார். நாமும் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வோம் என சொல்லும் நிலைமை உள்ளது.
ஆகவே மற்ற கட்சிகள், இதரக் கட்சிகள் உள்பட மற்றும் பலர் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். திமுக 5- ஆண்டு ஆட்சியிலிருந்த காலத்தில் 25- நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து கைவிட்டுச் சென்றது.அதற்குக் காரணம் தொழில்துறை அமைச்சருக்கு ஒரு ஆக்டிங் அமைச்சர் இருந்தார். அவர் வேறு யாருமில்லை அமைச்சரின் தம்பிதான்.
அந்தத் தம்பி ஒவ்வொரு முதலீட்டிற்கும் இது கொடுங்கள் அது கொடுங்கள் என (கமிஷன்) கேட்டுக்கொண்டே இருந்ததால் 25 நிறுவனங்கள் நம்மை விட்டுப் போய்விட்டது. இதனால் 2- லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்காமல் போனது.
முதலீடு செய்ய வரும் தொழில் நிறுவனங்களிடம் அவர்கள் கேட்ட லஞ்சத்தால் 3.3 லட்சம் கோடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் பறிபோனது. தமிழகமே வேண்டாம் என ஓடிப்போன
அந்த 25- நிறுவனங்களுக்கு பதில் சொல்லுங்கள். வேலை வாய்ப்பை இழந்த 2- லட்சம் இளைஞர்களுக்கு பதில் சொல்லுங்க.
இன்னும் அந்த தம்பி ஆக்டிங் அமைச்சராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஊழல் அவரை விட்டு விலகவில்லை. அதையும் ஒழித்துக் கட்டுவதற்கான விதிகளை வகுத்து வருகிறோம்.
எதிர்க்கட்சியில் பலர் இன்னும் திருமண வீடுகளிலும், ஒவ்வொரு மேடைகளிலும் கதறி க் கொண்டே யிருக்கிறார்கள். சென்னை மேயர் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பலிருந்தவர்கள் காரைப் பிடித்து தொங்கிக் கொண்டு செல்வதும், மற்றவருக்கு குடையைப் பிடிப்பதும், பவர் என்றால் என்ன என த் தெரியாமல் எதையெதையோ கத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள் என சென்னை மேயர் பிரியாவிற்கு பதிலடி கொடுத்தார்.
தன் மீதான விமர்சனம், உருவ கேலியை விட்டுவிட்டு கொள்கை ரீதியாக என் பக்கத்தில் இருந்து என்னிடம் பேச முடியுமா? என சவால் விடுத்துள்ளார். பெண்கள் முன்னேற்றம் என ஆட்சியிலிருந்த கட்சிகள் 70- ஆண்டுகளாக ஏமாற்ற மட்டும்தான் செய்தார்கள்.
இதுவரை எத்தனை பேரை அமைச்சராக்கினார்கள். ஆனால் இன்றைக்கு முதல்வர் விஜய் நான்கு பெண் அமைச்சர்களை அமர வைத்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின் சட்டமன்றத்தில் பெண் தலைமைச் செயலாளரை அமர வைத்துள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் என்பது வெட்டிப் பேச்சாகவே பயன்படுத்தி யுள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தான் அதை செய்து காட்டியுள்ளோம். பெண்கள் முன்னேற்றம் என கூறும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் உங்கள் வீட்டிலுள்ள உங்கள் தங்கையவே முடக்குவதற்கு டெல்லியில் அமர வைத்தீர்கள்.
தமிழக ஆட்சியில் அவருக்கு என்றைக்காவது பவர் கொடுத்தீர்களா?, அதை தடுத்து நிறுத்துவதற்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்மணிக்கே அவ்வளவு தொந்தரவு கொடுத்துள்ளீர்கள். திமுகவிலுள்ள அத்தனை பெண்களும் அதனைப் பார்த்து உங்களுக்கு எங்கு மரியாதை கொடுக்கிறார்களோ அங்கு வந்து சேருங்கள்.
சம வாய்ப்பு என்று சொல்லி திமுகவினர் ஏமாற்றி வருகிறார்கள். திமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயர சம்பவம் தொடர்பாக 36- மணி நேரம் வழக்கை எடுக்காமல் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு குழந்தைகளை அழைத்து ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட ஆட்சியை அமைத்துக் கொண்டு 30- நாட்களில் அத்தனை சாதனை படைத்துள்ள தலைவரை நீங்கள் கேள்வி கேட்பீர்களா?, பெண்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்படும் எங்களைப் பார்த்து நீங்கள் கேள்வி கேட்பதா?, பெண் சட்டமன்ற உறுப்பினர் தனது குழந்தையுடன் சட்டமன்றத்திற்கு வந்தால் என்ன தவறு.இதை வைத்தும் இழிவான அரசியல் செய்கிறது திமுக. என்றார்.
இதையும் படிங்க: சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி வளரும்! அமைச்சர் கீர்த்தனா அதிரடி திட்டம்! மாஸ்டர் ப்ளான்!