காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், செல்வப் பெருந்தகை, வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும் என்ற தலைப்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்து இருப்பதாகவும், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்துச் சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார். காசாவின் நடக்கும் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரம் என்று பார்க்க கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

காசாவை மறு கட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் 14ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் ஸ்டாலின் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: “அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை”... ஆண்டிப்பட்டியில் ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணனின் விழுதுகள்...!
உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா என்றும் பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: விஜயை ஒரு நைட் ஜெயிலில் வைத்தால்... தமிழ்நாடு அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை...!