எடப்பாடி பழனிச்சாமி புதூர் பேருந்து நிலையம் முன் பேசுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர் . பெண்களை அழைத்து வர அதிமுக பெண் நிர்வாகிகள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கான பெயர் பட்டியலை அதிமுக பெண் நிர்வாகிகளிடம் அந்தந்த பகுதிகளில் இருந்து அழைத்து வரும் பெண் பெயர் பட்டியலை இளைஞர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதில் அழகர் ஆற்றில் இறங்க வரும் குதிரை வாகனம் போல் தயார் செய்து எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் அவரை எதிர்கொண்டு எதிர்சேவை கொடுத்து வரவேற்பது போல் செய்திருந்தனர்.
இதேபோல் காளி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பறவை காவடி என்று முதுகில் அழகு குத்தி நான்கு சக்கர வாகனத்தில் செல்வார்கள். அதே போல் ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் இளைஞர் ஒருவர் அந்தரத்தில் தொங்கி முதுகில் கொக்கிகளை குத்தி இருந்தார். அவரின் கால்களை கட்டி இன்னொருவர் இழுத்து இழுத்து ஆட்டம் காட்டினார். இது மனித உரிமை மீறல் என்றும், மனித தன்மையற்ற செயல் என்றும் அங்கிருந்தவர்கள் குற்றச்சாட்டினர்.
இதையும் படிங்க: அமமுகவும் அம்பேலா?... பாஜக கூட்டணிக்கு சைலண்ட்டாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி...!
நீண்ட நேரம் இவ்வாறு இருந்ததால் இளைஞர் வலி தாங்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் இறங்கி சென்று விட்டார்.முதுகில் அழகு குத்தியவரை காலில் கயிறு கட்டி இழுத்தது அங்கிருந்த கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக இளைஞர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
இதையும் படிங்க: சம்பாதித்ததை காப்போம்... சம்மந்தியை மீட்போம்! இபிஎஸ்ஐ கலாய்த்த சேகர்பாபு