சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறியணுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருப்பதனால் மக்கள் இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய தவறுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என என தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர்மான கனிமொழி தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் வாசுவநல்லூரில் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் ஆன கனிமொழி கலந்துகொண்டு சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தைச் செயல்படுத்தத் தீவிரம் காட்டி வருவது குறித்த கேள்விக்கு அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கை முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இது குறித்து முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க முடியும்
இதையும் படிங்க: “நல்லா வருது.. வேணான்னு பாக்குறேன்”..! நாங்க கோட் சூட் போட கூடாதா..? திருச்சியை அலறவிட்ட முதல்வர் விஜய்..!
திரும்பத் திரும்ப தி.மு.க-வை விஜய் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு அவர்கள் இன்னைக்கு ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள், அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறியணுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருப்பதனால் மக்கள் இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய தவறுகள், இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எப்படி இருக்கிறது என கேட்டதற்கு செய்தியாளர்களான உங்களுக்குத்தான் நன்றாக தெரியுமே என பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார்,்தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யுஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவரணி துணை செயலாளர் செண்பகவிநாயகம், ஒன்றிய குழு தலைவர் பொன்முத்தையா பாண்டியன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பொன்துரைச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!