முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சரின் அறைக்குச் சென்றார்.
அங்கு அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி உள்ளார். இதில் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்ததா என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், இது வெறும் மரியாதை சந்திப்பு மட்டுமல்ல என்ற யூகங்கள் எழுந்தன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐந்தாண்டு கால நல்லாட்சியை வாழ்த்துவதற்காக முதலமைச்சரை சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் அதிமுகவோடு அவர் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில், என் டி ஏ கூட்டணியையும் அவர் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓ. பன்னீர்செல்வம் எந்த நிலைமையில் முதலமைச்சரை சந்தித்தார் என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!
தாங்கள் ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் எந்த பக்கத்தில் மதிப்பு மற்றும் மரியாதை இருக்கும் என்பதை உணர்ந்து ஓபிஎஸ் முடிவு வேண்டும் என்றும் தெரிவித்தார். தான் கூட முதலமைச்சரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று கூறிய நயனார் நாகேந்திரன், அவர் எதற்காக முதலமைச்சரை சந்தித்தார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். மார்ச் 10-ஆம் தேதி திருச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றும் இடத்தைத் தேர்வு செய்த பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரச்ச மாவையே அரைக்கும் பட்ஜெட்..!! DMK ALL FAIL... நயினார் விளாசல்..!!