நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.சபரிவர்மன் கைது செய்யப்பட்டபோது முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கத்தை மறுத்து அவரது குடும்பத்தினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், மாற்றுத்திறனாளி என்பதைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் அவரை அடித்தே கொலை செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க முடியல..! தமிழ்நாட்டை எப்படி காப்பாத்தப் போறாங்க..? உதயநிதி சவால்!
ஆனால் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏன் இப்படி..? உதயநிதி பேசியது அரசியல் பிழை..! சிபிஐ வீரபாண்டியன் அதிருப்தி..!!