நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
18 தொகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் அங்கு நடக்கும் விபரங்கள் குறித்து கேட்டுள்ளேன். யார் யார் எப்படி வேலை செய்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்திருக்கிறேன்.அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்துள்ளேன்.
எங்களுடைய குறிக்கோள் திராவிட முன்னேற்றக் கழக அரசை வீட்டிற்கு அனுப்புவது தான்.தேர்தல் வருவதால் புதிய புதிய திட்டங்களை கூறி வருகிறார்கள். பாமக அன்புமணி ஆட்சியில் பங்கு கேட்கிறாரே என்ற கேள்விக்கு, அது அவரவர்கள் விருப்பம்.
இதையும் படிங்க: #BYEBYE STALIN கதற விடுது..! இன்னும் கதற விடுவோமா? அடித்து தூள் கிளப்பும் இபிஎஸ்..!
ஓரணியில் தமிழ்நாடு என திமுக திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு, நாங்கள் பொதுமக்களோடு சேர்ந்து ஓரணியில் நிற்கிறோம். திமுகவினர் மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்லிவிட்டாரே பிறகு என்ன. ஒவ்வொரு காவல்துறையினரின் மனதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஒழுக்கமாக முருகன் மாநாடு நடைபெற்றது.
எடப்பாடி பழனிச்சாமி தனித்து ஆட்சி என்கிறார்; கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அவர் சொல்வதை பாஜக ஏற்கிறதா?, இந்தக் கேள்விக்கு நான் 100 முறை பதில் சொல்லிவிட்டேன். தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பாஜக கைவிட்டு விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?, நீங்கள் இதை விட மாட்டீர்கள் போலையே. பாஜக கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வருகிறதா? கட்டாயமாக கூடுதல் கட்சிகள் வர இருக்கிறது என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் நடத்தும் பயணத்திற்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கும் மிகப்பெரிய எழுச்சியாக மக்கள் வந்தனர். நடிகர் விஜய்க்கு நாங்கள் எந்த அழைப்பும் எடுக்கவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பிற்கு கோரிக்கை விடுப்போம் பீகாரில் தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்! நிரந்தரமா குட்பை சொல்ல போறாங்க... இபிஎஸ்ஐ வகுந்தெடுத்த ஸ்டாலின்..!