தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், சாதி-மத-இன மறுப்புச் சிந்தனையுடன் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்தி நிற்கும் நாம் தமிழர் கட்சி, பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரான அதன் நிலைப்பாடு, கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. டாஸ்மாக், தமிழ்நாட்டின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், கட்சி அதை சமூக அழிவின் சின்னமாகக் கருதுகிறது.
சீமானின் பேச்சுகள் இந்தப் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. கட்சியின் பெண்கள் பாசறை மற்றும் இளைஞர் அணி, இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைக்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் மதுபான கடைக்கு முன்பு குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டதால் பதபரப்பு ஏற்பட்டது. முற்றுகைப் போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மதுபான கடையை மூட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!
மதுபான கடையை இழுத்துப்பூட்டிய நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரின் பேரிகார்டுகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தஞ்சாவூரில் அருமலைக்கோட்டை கிராம மக்களுடன் இணைந்து, டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!