மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜயை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும் ? என வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். அதில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பாருங்கள் ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பாருங்கள் என நாம் தமிழர் கட்சி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுக யார் கையில் இருக்கிறது என்பதை கேட்கும் விஜய் ஏன்? அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கேட்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், நான் கூட்டணி வைத்தால் என்னுடன் இருப்பவர்கள் போயி விடுவார்கள்.தனித்து தான் போட்டியிடுவேன் என்றார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...!
விஜய் வந்தால் உங்கள் ஒட்டு பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, என்னுடன் பதர்களுக்கு மணியை போன்றவார்கள் காற்று அடித்தால் பறக்க மாட்டீர்கள்.கூட்டத்தை பார்க்காத்தீர்கள்.திருச்சியில் பிப்ரவரி 6ம் தேதி நாங்கள் மாநாடு நடத்துகிறேன் ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என நான் காட்டுகிறேன் என தவெகவிற்கு சவால் விடுத்தார்.
முதல்வர்கள் அமைச்சர்கள் பதவி நீக்கம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள மசோதா பேச்சு பொருளாக மட்டுமே இருக்குமே தவிர மத்திய அரசு சட்டமாக கொண்டு வர மாட்டார்கள்.விவாதம் என்ற பெயரில் காலம் தாழ்த்துவார்கள் எனக்கூறிய சீமான், குஜாராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்பதை ஏற்கிறார்களா?, அமலாக்கத்துறையில் ரெய்டில் அதிக பணம் வாங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு குட்டு... கூட்டணிக்கு வேட்டு... அதிமுகவுக்கு தூது... ஒரே நேரத்தில் ஓங்கியடித்த ஓபிஎஸ்...!