• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பட்டினப்பாக்கம் இடத்தை மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 10:51:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pattinampakkam fisherman protest

    தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள சுமார் 25.55 ஏக்கர் நிலத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கு தமிழக அரசு செப்டம்பர் 8ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அரசாணை (Ms) எண் 564-ன் அடிப்படையில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் உள்ள இந்த நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை உள்ளடக்கியதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டதுடன், கட்டட வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக மூன்று குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: போட்டுறா வெடியா...!! - மீனவர்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்த தவெக... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ஆணை ரத்து?

    எதற்காக எதிர்ப்பு?

    புதிய தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி, பாரம்பரியமாக மீனவ மக்கள் வசித்து வரும் கடலோரப் பகுதியாகும். இந்த நிலம் தங்களது பாரம்பரிய நிலம் என்றும், கடந்த காலங்களில் குடியிருப்புகள் அமைப்பதற்காக தங்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். 1956–57 காலகட்டத்தில் முள்ளிக்குப்பம் மீனவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டதாகவும், தற்போது அந்த நிலமே புதிய தலைமைச் செயலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மீனவ அமைப்புகள் கூறுகின்றன.

    மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும், படகுகளை நிறுத்துவது, மீன்பிடி வலைகளை பழுது பார்ப்பது மற்றும் உலர்த்துவது, மீன் விற்பனை செய்வது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல், தலைமைச் செயலகம் போன்ற மிகப்பெரிய அரசு வளாகம் அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கலாம் என்றும், கடற்கரைக்குச் செல்லும் தங்களது வழித்தடங்கள் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் மீனவ மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல்:

    பட்டினப்பாக்கம், சாந்தோம் ஹை ரோடு, கிரீன்வேஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், கடலோரப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் கடலோரச் சூழலியல், வெள்ளம், புயல் மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பாதிப்புகள் குறித்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இதனிடையே, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பட்டினப்பாக்கம் இடத்தை மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. சில கட்சிகள் ஏற்கனவே உள்ள நிர்வாகக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது அல்லது சென்னைக்கு வெளியே ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பது போன்ற மாற்று வழிகளையும் முன்வைத்துள்ளன.

    இன்று மீனவர்கள் போராட்டம்: 

    இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக, அரசாணை எண் 564-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வசித்து வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகம் கட்டும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

    இந்தத் திட்டத்திற்கு மீனவ அமைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று காலை 10 மணி அளவில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    மேலும் படிங்க
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    சினிமா
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் புது ரூல்ஸ்... இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை.! தீவிர நடவடிக்கை..!

    புதுச்சேரியில் புது ரூல்ஸ்... இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை.! தீவிர நடவடிக்கை..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share