நடப்புநிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக 14 நாட்கள் மட்டுமே வேலை அளிக்கப்பட்டதாக தமிழக அரசு மீது பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுருக்கிறார். அதில் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவோம் என்று சொல்லி வாக்குறுதி கொடுத்து திமுக 10% கூட அந்த வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவர் புள்ளி விவரங்களோடு பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது தற்போது நடப்பு நிதியாண்டில் வெறும் 14 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிதியாண்டு முடிவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் இன்னும் மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி பார்த்தாலும் சராசரியாக அதிகபட்சமாக ஒரு நபருக்கு 16 நாட்களுக்கு மேல் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அன்புமணியை அரெஸ்ட் பண்ணுங்க... போர்கொடி தூக்கிய பாமக எம்எல்ஏ அருள்...!
150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதில் 10% அளவுக்கு கூட வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்காதற்கு திமுக அரசு வெட்கி தலை குனிய வேண்டும் என்று அன்புமணி குறிப்பிட்டிருக்கிறார்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் வெறும் 12 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களை மிகவும் குறைவு என குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் குறைந்தது 50 நாட்கள் வேலை வழங்க 43 மனித நாட்களுக்கு வேலை தேவைப்படுவதால் அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் .மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும், மாநில அரசு உரிய அழுத்தத்தை கொடுத்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் திமுக மத்திய அரசுக்கு கடிதம் கூட எழுதவில்லை என்றும், திமுகவின் முகமூடிகள் ஒவ்வொரு நாளும் கிழிந்து தொங்குவதாகவும் தொடர்ந்து ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஏனென்றால் பொதுமக்களுடைய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். அத்தகைய திட்டத்தில் 150 நாட்கள் இல்லை என்றாலும், 100 நாட்கள் கட்டாயம் வேலை வேலை கொடுக்க வேண்டும் அதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: காட்பாதருக்கு மேல் காட்பாதர் இருக்காங்க... ஊழல் நடந்தது உண்மை! அடித்துக் கூறும் அன்புமணி...!