72 நாட்களுக்கு பிறகாக திறந்த வெளியில் மக்கள் சந்திப்பு பரப்புரையை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கிறார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஆறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக 41 பேர் பலியாகினர். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம் மக்கள் சந்திப்பு தள்ளி போடப்பட்ட நிலையில், அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதற்குப் பிறகாக வெளியரங்கள் அதாவது பொதுக்கூட்டம் போல இந்த மக்கள் சந்திப்பு பரப்புரையை அடுத்தடுத்து எடுத்துச் செல்ல தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் புதுச்சேரியிலிருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தொடங்கவுள்ளார். இன்று காலை 10:30 மணி அளவில்புதுச்சேரியில் இருக்கக்கூடிய உப்பளம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை நடைபெற இருக்கிறது. குறிப்பாக ஒரு பொதுக்கூட்டம் போல மேடை அமைப்பதற்கான அனுமதி இல்லாத காரணத்தினால் அவருடைய பரப்புரை பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று பேச இருக்கிறார். அவருக்கு முன்பாக பத்து கேபின்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கேபின்களிலும் 500 நபர்கள் என்ற வீதம் 5000 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கியூஆர் கோடு உடன் பொருந்திய அடையாள அட்டை கூப்பன் என்பது வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த கூப்பன் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10:30 மணிக்கு இந்த கூட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், காலை 5:30 மணியிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும், இளைஞர்களும் அதிக அளவில் வெளியிலே காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது காவல்துறையினர் ஒவ்வொருவராக கியூஆர் கோர்ட்டை வைத்து சோதனை செய்து உள்ளே அனுமதித்து வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் படையெடுத்து வருகின்றனர். எந்த பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கால் பதிக்கும் விஜய்... ”இன்னொரு முறை தவறு நடந்தால்”... அண்ணாமலை அதிரடி எச்சரிக்கை...!
இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறையும் அதேபோல தமிழக வெற்றிக்கழக தலைமையும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கரூர் சம்பவத்திற்கு பிறகாக நடக்கக்கூடிய எந்த ஒரு கூட்டத்திற்கும் கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளை வைத்திருப்பவர்களையும் அழைத்து வர வேண்டாம். முதியோர்களை அழைத்து வர வேண்டாம் என தமிழக வெற்றி கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரக்கூடிய நபர்களுக்கான இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன பார்க்கிங்குக்காக மைதானத்தை சுற்றி இருக்கக்கூடிய மூன்று பகுதிகள் தயார் நிலையில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வரக்கூடிய வாகனங்களை பார்க் செய்துவிட்டு குறிப்பிட்ட ஒரு 100 மீட்டரிலிருந்து 150 மீட்டர் தூரம் நடந்து வந்து செல்வதற்கான வழிகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மைதானத்தை சுற்றிலுமே முழுமையாக காவல்துறை பாதுகாப்பு என்பது போடப்பட்டிருக்கிறது. புதுச்சேரியை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து நுழைவு வாயில்களிலுமே புதுச்சேரி காவல் துறையினர் மற்றும் தமிழ்நாட்டுடைய எல்லை பகுதிகளில் தமிழ்நாட்டின் காவல் துறையினர் உதவியுடன் தமிழகத்தை சேர்ந்த மற்ற எந்த ஒரு நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ உரிய அனுமதி இல்லாம புதுச்சேரியை நோக்கி வருவதை தடை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த மைதானம் இருக்கக்கூடிய ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரிகேடுகள் அமைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் இதுக்குள்ள வந்தா வருகிறார்களா என்பதை சோதனை செய்யவும் ஒவ்வொரு எல்லையிலுமே பத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!