செங்கோட்டையன் கட்சியிலேயே இல்லை என உளறி கொட்டி பத்திரிக்கைகளை படிப்பதில்லையா என நையாண்டி பேசி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சமாளிப்பு. பொன்னேரியில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பொன்னையன் செய்தியாளர்களிடம் மல்லுக்கட்டல்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் - கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு 10 நாட்கள் கெடு கொடுத்த செங்கோட்டையன் தற்போது கட்சியிலேயே இல்லை என உளறி கொட்டினார்.
தொடர்ந்து நீங்கள் பத்திரிகைகளையே படிப்பதில்லையா என நையாண்டித்தனமாக செய்தியாளர்களை பார்த்து கேட்டுவிட்டு பின்னர் செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பொன்னையன் சமாளித்தார். செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்த போது தானே பேசினார் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சராக இருந்தாலும் கடந்த காலமெல்லாம் கடலில் மூழ்கி விட்டதால் அதைப்பற்றி பேச வேண்டாம் எனவும், செங்கோட்டையன் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி தான் பேசுவார் அதுதான் கட்சியின் முடிவு என்றும் பொன்னையன் நழுவலாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: பாஜக இருக்க இடம் சர்வநாசம்! அதிமுக நாலா ஒடைய காரணமே அவங்கதான்... குண்டை தூக்கிப்போட்ட செல்வப் பெருந்தகை...
நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லையா என்ற கேள்விக்கு கட்சிக்கு என கொள்கைகள் உள்ளதெனவும், அந்த கொள்கைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார். கட்சி தொண்டர்கள் எடப்பாடியிடம் மட்டும் தான் உள்ளார்கள் எனவும், இது தெரியவில்லை என்றால் ஊடகங்களுக்கு தகுதி குறைவு என மக்கள் எண்ணிவிடுவார்கள் என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்கள் பதில் கேள்வி எழுப்பிய போது கள நிலவரம் என்ன அதிமுகவில் எவ்வளவு தொண்டர்கள் எவ்வளவு உள்ளார்கள், யார், யார் பக்கம் எவ்வளவு உள்ளார்கள் என்பதை பார்த்து பின்னர் கேளுங்கள் என்றார். தொடர்ந்து செங்கோட்டையன் குறித்த எந்த கேள்விகளுக்கும் எக்காரணம் கொண்டும் பதிலளிக்க முடியாது என செய்தியாளர்களிடம் பொன்னையன் மல்லுக்கட்டினார்.
செங்கோட்டையன் பேட்டிக்கு பின்னால் பாஜக உள்ளதாக சிலர் சந்தேகம் எழுப்புவது குறித்த கேள்விக்கு, திமுக சார்பில் நீங்கள் பேசுவதாக மக்கள் நினைப்பார்கள் என பேசினார். ஓபிஎஸ் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்துடன் இணைவதாக செய்திகள் வெளியாகிறதே என்பது குறித்த கேள்விக்கு அவர்களிடமே கேளுங்கள் எனவும், அவர்களுக்கும், எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் பேசுனது தப்பு இல்ல! தொண்டர்கள் எண்ணத்தை தான் பிரதிபலித்தேன்... செங்கோட்டையன் விளக்கம்