• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக முகத்திரை கிழிக்கப்படும்! உண்மை வெளிவரும்!! முதல்வர் விஜய் அரசை கடுமையாக விமர்சித்த எஸ். ரகுபதி!

    தவெக அரசு திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக எஸ். ரகுபதி விமர்சனம். 170 ஆவணங்கள் விவகாரம், நீதிமன்ற எதிர்மனு, விராலிமலை வெற்றி குறித்தும் புதுக்கோட்டையில் பேட்டி.
    Author By Pandian Fri, 30 Oct 2026 11:21:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ragupathy Slams TVK Government, Says DMK Allegations Will Be Exposed in Court

    புதுக்கோட்டை: திமுக மீது தவெக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் தவிடுபொடியாகும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். தவெக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல், திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி வருவதாக விமர்சித்த அவர், “தவெக முகத்திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளியே வரும்” என்றும் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை திமுக வட்டப் பிரதிநிதி விஜயகுமார் மறைவையொட்டி, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகர்மன்ற வளாகத்தில் அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, மறைந்த விஜயகுமாரின் படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ். ரகுபதி, புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்க வருகை தருவது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்குச் சான்று என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய தவெக அரசு பல்வேறு மாவட்டங்களில் திறந்து வைத்து வருவதாகவும், புதிய திட்டங்களை உருவாக்குவதில் அரசு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்..! 20% போனஸ்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    தவெக அரசு நல்லாட்சியை வழங்கத் தவறியுள்ளதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் ரகுபதி கூறினார். அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்புவதற்காகவே திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிலைக்காது என்றும், விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்றும் கூறினார்.

    DMK

    திமுகவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எத்தனை ஆவணங்கள் இருப்பதாக வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்றும், அவற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் ரகுபதி சவால் விடுத்தார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அந்த வழக்குகள் பின்னர் நிலைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது திமுகவுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளும் அதேபோன்று முடிவடையும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

    மேலும், 170 ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறுவது உள்ளிட்ட தகவல்களை வெளியிடுவதால் மட்டும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிடாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், தங்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப் போவதாகவும் கூறினார். பொய் வழக்குகள் என்று நிரூபிக்கப்பட்டால், வழக்குத் தொடர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

    DMK

    தற்போதைய ஆட்சியை விமர்சித்த ரகுபதி, “ரீல்ஸ் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சாடினார். ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காகவே இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழக சிறைத்துறையின் தற்போதைய நிலை குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்தார். திமுக ஆட்சிக் காலத்தில் சிறைத்துறை சிறப்பாகச் செயல்பட்டதாகவும், இந்திய அளவில் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதைப் பெற்றதாகவும் கூறிய அவர், தற்போது சிறைத்துறை சீரழிந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். தவெக அரசு பொறுப்பேற்று ஐந்து மாதங்களே ஆன நிலையில், சிறைத்துறையின் நிலை தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.

    விராலிமலை சட்டமன்றத் தொகுதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் நீக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார். விராலிமலை தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறுவதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு திமுக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    தொகுதியில் திமுகவில் இருந்து சிலர் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறிய ரகுபதி, அவர்கள் தற்போது தவெகவில் இணைந்திருப்பதை வெளிப்படையாகக் காட்டியதற்காக அந்தக் கட்சிக்கு நன்றி தெரிவித்தார். துரோகம் செய்தவர்களுக்கு இனி திமுகவில் இடமில்லை என்றும், கட்சிக்குள் இருந்தபடியே தகவல்களை வெளியே கொண்டு சென்றவர்களால் கடந்த தேர்தல்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார். இனி திமுக தரப்பிலிருந்தே தேவையான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சிறுமிகள் காணாமல் போவது தொடர்பான சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ரகுபதி கேள்வி எழுப்பினார். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை என்றும், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகள் முதலமைச்சரின் கவனத்துக்குச் செல்லாமல் இருக்க முடியாது என்றும், அதிகாரிகள் அவற்றை முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். இல்லையெனில், “நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போன்ற நிலை ஏற்படும்” என்று விமர்சித்தார்.

    தவெக அரசின் செயல்பாடுகள், திமுக மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விராலிமலை தொகுதியின் அரசியல் நிலவரம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து புதுக்கோட்டையில் எஸ். ரகுபதி தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: ஊழல் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்! EPS-க்கு நிம்மதி இல்லை! ரமேஷ் அதிரடி பேட்டி!

    மேலும் படிங்க
    #BREAKING புழல், தேக்கம்பட்டியை அடுத்து பேரதிர்ச்சி... கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்... நடந்தது என்ன?

    #BREAKING புழல், தேக்கம்பட்டியை அடுத்து பேரதிர்ச்சி... கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING “இனி சும்மா விடமாட்டேன்...” - விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய்... சிறைத்துறை அலுவலர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    #BREAKING “இனி சும்மா விடமாட்டேன்...” - விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய்... சிறைத்துறை அலுவலர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே ஷாக்...!! - தமிழகமே அதிர்ந்த ‘ஜெயில் பிரேக்’... தேக்கம்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் மீது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே ஷாக்...!! - தமிழகமே அதிர்ந்த ‘ஜெயில் பிரேக்’... தேக்கம்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் மீது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே... சீமான், ஸ்டாலின், இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த விஜய்... இடைத்தேர்தலுக்கு மாஸ் பிளான்...!

    இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே... சீமான், ஸ்டாலின், இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த விஜய்... இடைத்தேர்தலுக்கு மாஸ் பிளான்...!

    அரசியல்
    "ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம்"... தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்...!

    "ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம்"... தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்...!

    இந்தியா
    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share