ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக கூறினார். நமது ராணுவத்தினர் நம்மை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் முப்படைகளும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்த அவர், பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் என்றும் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு துணை நின்ற பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் முழு வெற்றி அடைந்துள்ளதாக கூறிய அவர், பகல்காமில் அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளையே கொன்றுள்ளதாகவும் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளின் பிணத்தில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை... வெட்கமற்ற பாகிஸ்தான்..!

மேலும், பகல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு உரிமை உள்ளது என்றும் இந்திய வீரர்கள் தங்களது முழு தீரத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையில் துல்லியமாக பதில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட் என்றும் கூறினார் .
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்; ஆயுதப்படைகளுக்கு கொடுத்த சிக்னல்.. வெளியானது பரபரப்பு அறிவிப்பு!