பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயம்டைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. கோட்லி, பகவல்பூர் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகனை தாக்குதல்களை நடத்தியது. அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரை சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்கு பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதை போர் நடவடிக்கையாகவே கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் ஷபா ஷரீப் தனது அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி இருந்தார். இந்நிலையில் இந்தியாவினுடைய இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் நாட்டினுடைய ராணுவத்திற்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தற்போது பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானில் சற்று முன்னதாக மிக முக்கியமான ஒரு உயர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஹைஅலர்ட்டில் டெல்லி... இன்று அட்டாரி-வாகா எல்லையில் இதற்கு தடை...!

அந்த கூட்டத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள ஆயுதப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அந்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தானுடைய பிரதமர் அந்நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தருப்பதாகவும் கூட தகவல் வெளியாகி இருக்கிறது.

எப்படி சில நாட்களுக்கு முன்பு நமது பிரதமர் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டாரோ, அதேபோல அந்த நாட்டினுடைய ராணுவத்திற்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி தற்போது அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. எனவே பாகிஸ்தான் ஏதேனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அதனை பாகிஸ்தான் ராணுவமும் நிச்சயமாக எதிர்கொள்ளும் என்பது தான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய மறைமுக செய்தியாக இருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு மற்றொரு மரண அடி..! சத்தமில்லாமல் சரித்த இந்திய ராணுவம்..!