பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக செயல் தலைவருமான அன்புமணிக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 10-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், “என் பேச்சை மதிக்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் இனிஷியல் மட்டும் போட்டுக்கொள்ளட்டும்” எனக் கடுமையாக தெரிவித்த ராமதாஸ், உண்மையில் தனது மகனிடம்தான் இக்கோபத்தை வெளியிட்டார் என்பதே கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பை உருவாக்கியது.
இந்த சூழ்நிலையில், அதே நாள் இரவு 7.50 மணியளவில், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது தந்தையின் இல்லத்துக்கு அன்புமணி திடீரென சென்றது, பாமக வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!
ஆனால், அப்போது ராமதாஸ் வீட்டில் இல்லை. அவர் கும்பகோணத்தில் இருந்தார், அதை நன்கு தெரிந்து கொண்டு தான் அன்புமணி அங்கு சென்றிருக்கிறார். அன்புமணியின் திடீர் விஜயத்தின் பின்னணி, அவரது தாயார் சரஸ்வதி அம்மையாரை சந்தித்து நலம் விசாரிப்பதே. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த சரஸ்வதி அம்மையாரின் கவலை அன்புமணிக்கு புரிந்துள்ளது. அதாவது சரஸ்வதி அம்மையாருக்கு மகளை விட மகன் அன்புமணி மீது கூடுதல் பாசமாம். தற்போது குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் நிகழும் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள சரஸ்வதி அம்மையாரை நேரில் பார்த்து, கைகளைப் பிடித்து அன்புமணி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த உணர்ச்சி பெருக்கான தருணத்தின் வெளிப்படாக அன்புமணியும், சரஸ்வதி அம்மையாரும் கண்ணீர் வடித்துள்ளனர். புத்துணர்ச்சி தரும் அந்த சந்திப்பின் போது, தாயார் தனது கையால் சமைத்திருந்த எளிய டிபனை அன்புமணிக்கு பரிமாறியுள்ளார். பல நாட்களுக்கு பிறகு அம்மாவின் கையால் சாப்பிட்ட திருப்தியோடு அன்புமணி அங்கிருந்து புறப்பட்டு ஓமந்தூரில் நடந்த பிஏ நடராஜன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்றுள்ளார்.
இந்தச் சம்பவங்கள், “அப்பா-மகன்” பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே சென்றால் பாமகவின் எதிர்காலம் எதுவாகும்? என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் முக்கிய முடிவுகளில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சீரான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இது கட்சி நிர்வாகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!