• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அந்த விஷயத்துல எடப்பாடியார் தான் கெத்து...” - விஜய் மாஸ்டர் பிளானை மட்டையாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    நேற்று தவெக அரசு 100 நாள் சாதனையாக எடுத்து வைக்கப்படுகின்ற வெற்றி, தமிழக முதலீட்டாளர் மாநாடு ஏதோ முதல்வர் தனிப்பட்ட திருமண விழாவிற்கு அவரும் தொழில் துறை அமைச்சரும் அரசு அதிகாரிகளும் முதலீட்டாளர்களும் வந்து சென்றது போல,வந்து சென்றார்கள்.
    Author By Amaravathi Fri, 14 Aug 2026 11:24:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar about vijay investors meet

    எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள 9000 பேர் பங்கேற்றனர். தற்போது நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிக்கை ,ஊடகங்களுக்கு ஏன் அனுமதி இல்லை.  முதலீட்டாளர் மாநாடு விவரத்தை முதல்வர்  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம். குறைந்தபட்சம் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டாமா?. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டார் மாநாட்டில்  அரசு அதிகாரிகளும், முதலீட்டாளர்களும் திருமண விழாவுக்கு வந்து சென்றதைப் போல, பார்க்க முடிந்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு


    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், முதல்வர் விஜய் தலைமையிலே சென்னையில் நடைபெற்ற த.வெ.க அரசின் முதலாவது வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், 1.06 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களிலே 1.02 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இந்த மாநாட்டிலே வெளிப்படைத்தன்மை இருப்பதாக தெரியவில்லை. 

    முதலீட்டார் மாநாட்டில் செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகங்கள், அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்தம் செய்த தொழில் நிறுவனங்களிடம் அவற்றின் துறை, உற்பத்தி உள்ளிட்ட முதலீடுகள் தகவல்களை பெற முடியவில்லை என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.

    இதையும் படிங்க: பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

     முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதோ ரகசிய ஒப்பந்தங்களாக கையெழுத்திடுவதில் மௌனம் தான் நமக்கு புரியவில்லை. கடந்த காலங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தி சேகரிக்க பத்திரிக்கை காட்சி ஊடகங்களுக்கு முழு மரியாதையோடு அனுமதி அளிக்கப்பட்டதை நாம் இங்கே நினைவு கூற வேண்டி இருக்கிறது. 

    தமிழகத்திலே புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, உலகம் முழுவதும் கவனத்தையும் ஈர்த்தது. முதலீடுகளையும் ஈர்த்தது. இதனால் முதலீடுகள் தமிழகத்திற்கு வரலாறு காணாத வகையிலே வந்து கொண்டே இருந்தது. இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு,  எடப்பாடியார் தலைமையிலே 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

    இதில் புதிய தொழில் முதலீடுக்கான வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு எடுத்துக்காட்டி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திக் காட்டப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து தொழில் கருத்தரங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடைய கூட்டங்கள், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, தென்கொரியா, தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை, அகமதாபாத், கோயம்புத்தூர், டெல்லி, மதுரை, திருச்சி ஆகிய முக்கிய தலைநகரங்களிலும் கருத்தரங்கங்கள் நடத்தியதோடு, மாவட்டங்கள்தோறும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்களும் நடத்தப்பட்டன. 

     எடப்பாடியார் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு வானுறுதி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2019 ஐ வெளியிட்டார்.  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையநாயுடு நினைவு நாள் அன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டு நாடுகளாக மாநாட்டில் பங்கேற்றது. வெளிநாட்டு தூதர்கள், தூதக அலுவலர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் என உலகெங்கிலும் இருந்து வந்த சுமார் 9,000 பிரதிநிதிகள் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்டு சாதனை சரித்திரம் படைத்தார்கள்.

     இம்மாநாட்டின் மூலம் 10.5 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலான 3 லட்சம் கோடி அளவிற்கு தொழில் முதலீடுகளில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் ஜப்பான், கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் இருந்து பெறப்பட்டு, 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலீடுகளை ஈர்ப்பதிலே பெரு வெற்றி பெற்றுள்ளது. 

    அவற்றிலே தொழில் துறையில் 147 புரிந்துணர்வு ஒப்பந்தம மூலமாக 1,55,248 கோடி முதலீடு,தகவல் தொழில்நுட்பம், மூலம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 11,974 கோடி முதலீடு, எரிசக்தி மூலம் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 48,200 கோடி முதலீடு, வீட்டு வசதி மூலமாக 66 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக 48,980 கோடி முதலீடு, சுற்றுலா 8 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக 642 கோடி முதலீடு, வேளாண்மையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக 2011 கோடி முதலீடு, உயர்கல்வியிலே 51 ஒப்பந்தம் மூலமாக 1,014 கோடி முதலீடு, பள்ளிக் கல்வியிலே 3 ஒப்பந்தம் மூலமாக 157 கோடி முதலீடு, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலில் 32,205 கோடி முதலீடு, என மொத்தம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக மூன்று லட்சம்  கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையப்பமிட்ட நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும், தேவையான அறிவுரைகளையும் வழங்குவதற்கு முதலீடுகள் முழுமையாக பெரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு தொழில் துறையிலே முதன்முதலாக உலக முதலீட்டாளர் மாநாடு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, வேண்டிய ஆலோசனைகள், கண்காணிப்புகள், உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

     ஆனால் நேற்று தவெக அரசு 100 நாள் சாதனையாக எடுத்து வைக்கப்படுகின்ற வெற்றி, தமிழக முதலீட்டாளர் மாநாடு ஏதோ முதல்வர் தனிப்பட்ட திருமண விழாவிற்கு அவரும் தொழில் துறை அமைச்சரும் அரசு அதிகாரிகளும் முதலீட்டாளர்களும் வந்து சென்றது போல,வந்து சென்றார்கள். என்பதை நாம் பார்த்து முடிந்தது. 

    நேற்று நடந்த முதலீட்டாளர் மாநாடு விவரம் அறிய முதல்வர்  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம். குறைந்தபட்சம் வெளிப்படைத்தன்மையாவது வேண்டாமா? மக்களுக்கு தெரியணுமா, தெரிய வேண்டாமா?.

     வரலாற்றிலே நாம் அறிந்த வகையில் ஊடகம், செய்தியாளர்கள், காட்சி ஊடகங்கள், செய்தியாளர்கள் அனுமதிக்காமல் அமைதியாக நடந்தேறி இருக்கிற இந்த வெற்றி, தமிழக முதலீட்டாளர் மாநாடு தவெக அரசில் தொடரும் ரீல்ஸ் சர்ச்சைகளோடு தற்போது முதலீட்டாளர் மாநாடு சர்ச்சையும் சேர்ந்திருக்கிறது. 

    மொத்தத்தில் இது சர்ச்சை மாநாடாக தமிழக வெற்றித் தமிழக முதலீட்டாளர் மாநாடு நிறைவடைந்திருக்கிறது. பலன் கிடைக்குமா, கிடைக்காதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    மேலும் படிங்க
    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு
    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா
    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    சினிமா
    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த

    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த 'கோவிந்தா' கோஷம்! ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம் கோலாகலம்!!

    பக்தி
    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    சினிமா

    செய்திகள்

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    தமிழ்நாடு
    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share