ரோட்ஷோ தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களினுடைய ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட கோ n உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வும் இதை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அதாவது ஸ்டாண்டிங்
இதையும் படிங்க: ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!
ஆபரேஷன் ப்ரொசீஜர் என்று சொல்லக்கூடிய அந்த விதிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
தொடர்ந்து அதற்கான காலக்கடுவை நீட்டி இருந்தது. இந்த நிலையில் தான் இன்றைக்குஇந்த வழக்கு தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி. ரவீந்திரன் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சமர்ப்பித்தார். அதற்கு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தவெக கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஏதேனும் ஒரு நிபந்தனைக்கு அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்க தொடங்குவார்கள் என்றும், இதனால் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்வது ஒருபோதும் முடிவடையாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் தவெக உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும், அதற்கு நாங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தவெக உட்பட பல்வேறு கட்சிகள் அளித்த பரிந்துரைகளைக் கொண்ட இந்த வரைவு உருவாக்கப்பட்டது என்றும், சுமார் 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 42 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அவர்கள் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்தார். இதை வடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர்கள் தரப்புக்கு மட்டும் அந்த நகல்களை கொடுக்க உத்தரவிட்டுருக்கிறார்கள். வழக்கு விசாரணை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்துவைத்திருக்கிறார்கள்.
அன்றைக்கு வந்து வாத, பிரதிவாதம் என்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!