தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய நட்சத்திரமாகவும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜனநாயகன்' இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் அலையடித்து வருகிறது. 'ஜனநாயகன் திருவிழா' என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், குறிப்பாக திரையரங்குகளில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேவேளையில் டெல்லியில் தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சென்னையிலும் வேகமெடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனங்களுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் நீண்டகால நீட் எதிர்ப்பு உணர்வை மீண்டும் தூண்டியுள்ளது.டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்துடன் ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: "தவெககாரன்"...! குற்றவாளிகள் கூடாரமா TVK..? CM விஜய் மீது நயினார் தாக்கு..!
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் அந்த இளைஞரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் திரையரங்க வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!