திருச்சி விமான நிலையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆரில் நாம் ஏமாந்து விட கூடாது என்பதில் திமுக கவனமாக இருந்து செயல்பட்டது. எஸ்.ஐ.ஆர் மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதன் முழு விவரம் 19 ஆம் தேதி வரைவு வாக்களர் பட்டியல் வெளியான பின்பு தான் தெரிய வரும். வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறும் நிலையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் அது எப்படி என புரியவில்லை.
நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் 80 சதவீத வாக்காளர்களை இணைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் No Mapping என கூறி உள்ளார்கள். அதற்கான விளக்கம் தரப்படவில்லை. No Mapping என்கிற பெயரில் என்ன மோசடி செய்ய உள்ளார்கள் என்பது தெரியவில்லை, இருந்த போதும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
வாக்காளர்கள் யாரும் நீக்கப்பட்டு விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம். திமுக ஒரு போதும் ஏமாறாது. பீகாரில் நடந்தது போல் தமிழ்நாட்டில் நடக்காது. இது பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் வாழ்ந்த மண். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. எதையும் செய்ய முடியாது. அப்படியே ஏதும் தவறு நடந்தாலும் நீதிமன்றம் சென்று நீதியை திமுக நிலைநாட்டும் என சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: பயத்தை போக்க இபிஎஸ் போட்ட மேக்கப் தான் பொதுக்குழு கூட்டம்... R.S பாரதி விமர்சனம்...!
இதையும் படிங்க: விறுவிறு SIR பணிகள்... மேலும் அவகாசம் நீட்டிப்பு...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!