சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்கையில் பெரிய தூரம் இருக்கிறது. நீங்கள் பெரியாரை கொள்கை வழிக்காட்டி என்று சொல்கிறீர்கள். நாங்கள் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை வழிக்காட்டியாக கொண்டிருக்கிறோம். உங்கள் கொள்கைகளுக்கும் எங்கள் கொள்கைகளுக்கும் ஓராயிரம் கி.மீ இடைவெளி இருக்கிறது. எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? என்று கேட்டால் அதை விளக்கி சொல்ல வேண்டும். தமிழை சனியன் என்று சொன்னதை இவர்கள் ஏற்கிறார்களா? தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னதையும், தமிழ் படித்தால் எதற்கும் உதவாது, பிச்சை எடுக்க கூட லயக்கு இல்லை என்று சொன்னதையும், தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள் என்று சொன்னதையும் இவர்கள் ஏற்கிறார்களா?

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டதை இவர்கள் ஏற்கிறார்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, எந்த கொள்கையை காப்பாற்ற கட்சியை தொடங்கினீர்கள்? கொள்கை தேவையில்லை என்றால் திமுகவுடன் இணைந்தவிடலாமே! எதற்காக கிளை கழகங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அதிமுக பாஜகவுடன் கூட்டணி எனில், அதில் இணைந்துவிடலாமே! தனித்த கட்சி எதற்கு? அவங்க ஹோல் சேல் டீலர், நீங்கள் சப் டீலரா? நாங்கள் அரசியல் விடுதலைக்கு நிற்கிறோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை. இரண்டுக்கும் ரொம்ப தூரம் இருக்கிறது. அரசியல் நேரத்தில் கொள்கையை பார்க்காமல் இருப்பது என்பது, அரசியல் வியாபாரமாகும்.
இதையும் படிங்க: ஜெயில்ல போட்டாலும் பிரச்சனை இல்ல.. தடையை மீறி போராடுவேன்.. சீமான் திட்டவட்டம்..!

இந்த நாட்டில் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜகதான். என் மாநிலத்தின் அத்தனை உரிமைகளையும் பறித்து சென்றது காங்கிரஸ். உடன் இருந்தது திமுகவும், அதிமுகவும்தான். அப்படிப்பட்ட கட்சிகளுடன் சென்று என்ன உரிமைகளை கேட்பாய்? உதாரணத்திற்க அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீட்டை எடுத்துக்கொள்வோம். இந்த மண்ணில் இருக்கும் எல்லோருக்கும் இடஒதுக்கீடு அவசியம். எனவே அதை கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால் நீங்கள் இடஒதுக்கீட்டை பொதுப்பட்டியலிலிருந்துதானே எடுத்து கொடுத்திருக்க வேண்டும்?

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% எங்கிருந்தது வந்தது? அந்த மாதிரி வாங்கிதானே கொடுத்திருக்க வேண்டும். நானே தாழ்த்தி வீழ்த்தப்பட்டு கிடக்கிறேன். என்னிடமிருந்து எடுத்து கொடுத்தால் எப்படி சரியாக இருக்கும்? மட்டுமல்லாது அவர்களுக்கு முன்னுரிமை என்று ஏன் குறிப்பிட்டீர்கள்? இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை காட்டாதவர்களிடம் கூட்டணி வைத்தால் எப்படி உங்களால் கோரிக்கைகளை எழுப்ப முடியும்? வேங்கை வயல், பஞ்சமி நில மீட்பு போராட்டம் என எதையும் கூட்டணி கட்சிகளால் பேச முடியாது. இன்னைக்கு திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு எனில் அதற்காக நானும் மணியரசனும் போராட வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!