சிவகங்கை,காரைக்குடி, விருதுநகர் பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரசு போக்குவரத்துக் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கே அவ்வளவு அவமானமாக உள்ளது. தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு பதிலாக அரசு என்று சொல்கிறார்கள் அது எந்த அரசு என்றால் கர்நாடக அரசா? கேரளா அரசா? என கேள்வி எழுப்பிய சீமான் வரவேற்பு பலகலைகளில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள் அதை ஏன் தமிழில் எழுத கூடாது. எதில் அக்கறை செலுத்துகிறார்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் செல்கிறோம் அந்தப் பாதைகளில் மரக்கன்றுகள் ஏதும் வைத்துள்ளார்களா? கொடி கம்பங்களை தான் நட்டு வைக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது... கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!!

சென்னை அருகே நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன அரசியல் செய்யப் போகிறார்கள்.தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும் போது அதை தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் தேச துரோகம் ஆகிவிட்டதா? முதலில் இந்த தலைவர்கள் அரசியல் ஆக்கறாங்க அரசியல் பேசுறாங்க என்று பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம்.

எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார். எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது.கூட்டணி தர்மத்திற்காக இது போன்று பேசுகிறது மனசாட்சியுடன் செல்வ பெருந்தகை பேசுகிறாரா?காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி .வைத்திருந்தால் இப்படி பேசுவாரா? என கொந்தளித்தார்.
இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!