கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக எந்த மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்ல தேவையில்லை எனத் தெரிவித்தார்.
உங்களை பின்னணியில் இருந்து பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என்னை யாரும் இயக்க முடியாது தனிப்பட்ட முறையில் என்றார்
இதையும் படிங்க: 250 பக்கம்... எல்லாமே சீக்ரேட்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்...!
மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருப்பது குறித்த கேள்விக்கு, இது எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்க வேண்டிய கேள்வி எனக் கூறினார்.
மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்திருப்பது குறித்த கேள்விக்கு , அது அவருடைய விருப்பம் என்றார்.
அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, மகன் தலையிடுகின்றார் , மைத்துனன் தலையிடுகின்றார்.மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். மருமகன் தலையீடு இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. அதனால் அதைப் பற்றி சொன்னேன். மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும் என்றார்
அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்த கேள்விக்கு "அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என பதில்
அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என்ற கேள்விக்கு, யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது இருக்கிறது.
பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா என்ற கேள்விக்கு, "உறுதியாக" என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
திமுகவில் வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை வாரிசு அரசியல் கொடி கட்டி பறப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதன் கூட்டணி கட்சியான பாஜக தலைவர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதிமுகவின் குடும்ப அரசியல் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினரை குறிப்பிட்டு செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: 250 பக்கம்... எல்லாமே சீக்ரேட்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்...!