தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலைப் பரிசீலித்து அனுமதி வழங்கி வருகிறது. இந்த நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பயணச் செலவுகள், கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் போன்றவை வேட்பாளர்களின் தனிப்பட்ட தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாமல், கட்சியின் மொத்த செலவாகக் கருதப்படும் சிறப்பு சலுகை இவர்களுக்கு உண்டு.
இது தேர்தல் நடத்தை விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு 40 பேர் வரை, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு 20 பேர் வரை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி மார்ச் 15, அன்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி பெற்று வருகின்றன.

சமீபத்தில் பல்வேறு கட்சிகளின் பட்டியல்கள் ஒன்றாக அல்லது தனித்தனியே பரிசீலிக்கப்பட்டு, மொத்தம் 262 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் அரசியல் களத்தில் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழகத்தில் இந்தத் தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் வேளையில், 262 நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் கூட்டங்களை நடத்தி வாக்காளர்களை சென்றடைய உள்ளனர். நட்சத்திர பேச்சாளர்கள் அமைப்பின் பின்னணியைப் பார்க்கும்போது, இவர்கள் பொதுவாக கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபல பேச்சாளர்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சினிமா பிரபலங்கள் ஆகியோராக இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன ஆட்டத்துக்கு ரெடியா? 2026-லும் ராயபுரம் தான்...! 7வது முறையாக களமிறங்கும் ஜெயக்குமார்..!!