தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision) முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வர உள்ளது. இந்தக் குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளர் வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளதால், மார்ச் மாத முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாமகவுக்கு 17 தொகுதி?! ஒரு எம்.பி சீட்?! படிந்தது பேரம்! வெளியானது முக்கிய அப்டேட்!!

தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதற்கு முன்பாக புதிய சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி புதிய அரசு அமைய வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்ட விதி.
பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், தேர்தலை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடத்துவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கும். ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த நகர்வுகள் தமிழக அரசியல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளன.
இதையும் படிங்க: திமுக செய்யும் தகிடுதத்தம்!! வாக்காளர் பட்டியல் முறைகேடு! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்!