• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மதுரைக்கு என்ன செய்தது?" - மெட்ரோ, எய்ம்ஸ் குறித்துத் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

    மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும், மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதிவு குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 07 Dec 2025 18:20:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai Soundararajan Fires Questions at CM Stalin on Madurai Metro, AIIMS, and Industrial Development

    மதுரை நகரின் வளர்ச்சி குறித்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவு ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க. மூத்த தலைவரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்குச் சரமாரியாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களைப் பட்டியலிட்டீர்கள். ஆனால், ஐந்து முறை ஆட்சியில் இருந்த நீங்களும் உங்கள் கட்சியும் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலையை முன் கொண்டு வந்தீர்கள்? 

    இன்று மெட்ரோ ரயிலுக்குச் சரியான கட்டமைப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், நிர்வாக ரீதியாக மறுக்கப்பட்டதை, மத்திய அரசு பாரபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே? உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர், மத்தியில் அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும், மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை? நீங்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற போது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்திருக்கலாமே?

    பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது, மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசு இளைஞர்களைப் பக்கோடா வைக்கச் சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள்.

    ஆனால், இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களால் உலகிலேயே அதிக தொழில்முனைவோர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். குறிப்பாக, முத்ரா வங்கி என்று தொழில் தொடங்கக் கடன் கொடுக்கப்பட்டதில், அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும், பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள். ஆக, மத்திய அரசுப் பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    குடமுழுக்கு செய்ததை பெருமையாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில், இப்தார் விருந்துகளிலும், கிறிஸ்துமஸ் விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக, வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

    கடற்கரையில் கலைஞருக்குப் பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்குத் தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்றத் துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? உரிமையைத் தட்டிக் கேட்டால் அவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்கள்.

    மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்கக் கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான். இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150 கோடி ரூபாயில் சிறப்புச் சிகிச்சைக் கட்டடங்கள் மத்திய அரசின் உதவியினால் கட்டப்பட்டிருக்கின்றன.

    தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை பிரிவு பெற்றது என்பதையும் மறந்து விட வேண்டாம். மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 1000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாகச் சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்.

    தமிழிசை செளந்தரராஜன், முடிவாக, "தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி. மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவு படுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

    மேலும் படிங்க
    வி.ஐ.பி. தரிசனம்: "திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

    வி.ஐ.பி. தரிசனம்: "திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

    அரசியல்
    "பிரதமர் மோடிக்கு செல்லாத உளவு ரிப்போர்ட் பத்திரிகைக்கு வந்தது எப்படி?" - பாஜக நயினார் நாகேந்திரன் கேள்வி

    "பிரதமர் மோடிக்கு செல்லாத உளவு ரிப்போர்ட் பத்திரிகைக்கு வந்தது எப்படி?" - பாஜக நயினார் நாகேந்திரன் கேள்வி

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளி அருகே மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரியின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது!

    அரசுப் பள்ளி அருகே மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரியின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது!

    தமிழ்நாடு
    தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!

    தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!

    தமிழ்நாடு
    நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!

    நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!

    அரசியல்
    தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்!  கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!

    தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்!  கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வி.ஐ.பி. தரிசனம்:

    வி.ஐ.பி. தரிசனம்: "திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

    அரசியல்

    "பிரதமர் மோடிக்கு செல்லாத உளவு ரிப்போர்ட் பத்திரிகைக்கு வந்தது எப்படி?" - பாஜக நயினார் நாகேந்திரன் கேள்வி

    தமிழ்நாடு
    தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!

    தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!

    தமிழ்நாடு
    நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!

    நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!

    அரசியல்
    தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்!  கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!

    தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்!  கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!

    தமிழ்நாடு
    விஜய் பொதுக்கூட்டம்: அனுமதி மறுக்கப்படவில்லை; மாற்று இடத் தேர்வு: தவெக விளக்கம்!

    விஜய் பொதுக்கூட்டம்: அனுமதி மறுக்கப்படவில்லை; மாற்று இடத் தேர்வு: தவெக விளக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share