சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகார் ஒன்றில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணையின் போது போலீசார் அடித்து தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்த அஜித் குமாருக்கு நீதி வழங்க கோரியும், தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று காலையில் இருந்து சென்னையில் உள்ள சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அருண்ராஜ், காவல்துறையில் இதயம் மட்டுமல்ல மூளையும் அழுகிவிட்டது என்ற அவர், கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கலைஞர் சொன்னார் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகிவிட்டது என்றார். ஆனால் இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல.. இதயம் மற்றும் மூளை முற்றிலும் அழுகிவிட்டது. காவல்துறையின் மூளையாக செயல்பட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் செயலிழந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
ஒரு முதல் அறிக்கை கூட போடாமல், காவல் நிலையத்தில் இல்லை.. வேறு ஒரு இடத்திற்கு கடத்தி சென்று அடித்தே கொன்றிருக்கிறார்கள் என்றால், காவல்துறைக்கும் கூலிப்படைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். மேலும், இதற்கு முதல்வர் தார்மீக பொறுப்பு எல்லாம் அல்ல.. நேரடி பொறுப்பே முதல்வர் தான். எனவே முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆனால் அவர் இதை செய்ய மாட்டார். இன்னும் 8 மாதங்கள் தான் இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள் என்றார்.

நீங்கள் வைத்திருக்கும் காவல் மற்றும் உள்துறையை வேறு யாருக்காவது ஒதுக்குங்கள். உங்களது துறையை அமைச்சரவையில் வேறு ஒருவருக்கு ஒதுக்கி கொள்ளுங்கள்.. கொடுத்துவிட்டு உங்கள் பிரச்சாரத்தை தொடங்குங்கள்.. ஓரணியில் தமிழகம் போன்ற வேலைகளில் ஈடுபடுங்கள். மக்களுக்கு நீங்கள் சொல்லும் சாரி எல்லாம் வேண்டாம், நீதி தான் வேண்டும், இந்த நீதி கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் போது அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று அருண்ராஜ் கூறினார்.
விஜய் தலைமையில் அடுத்த ஆண்டு ஆட்சி நடக்கும் என்று அருண்ராஜ் கூறிய அந்த கணமே, தலைவர் விஜய் டக்கென திரும்பி பார்க்க, இதை கவனித்த தொண்டர்கள் ஆக்ரோஷமாக இரு கைகளையும் உயர்த்தி கரகோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!