தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி ஆன நேற்று வெளியானது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்து திமுக கடுமையான தோல்வியை சந்தித்தது. அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக தற்போது எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பாக்காத வகையில் மாபெரும் வெற்றியை தனித்து நின்று பெற்று இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இன்னும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இன்று கச்சி எம்எல்ஏக்களுடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி இருந்தார். பதவி ஏற்பு முடியும் வரை எம்எல்ஏக்களை சென்னையிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக மே 7ம் தேதி பதவி ஏற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவில் நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத தவெக..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?? லிஸ்ட் இதோ..!!
பதவியேற்பு விழாவிற்காக தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் அனைவரும் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 108 எம்எல்ஏக்கள் மட்டும் இருக்கும் நிலையில் மீதம் 10 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதற்கிடையில் 14 நாட்களில் பெரும்பான்மை நிரூபிப்பதாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!