தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அடுத்த கூட்டம் தஞ்சையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மார்ச் இரண்டாவது வாரத்திற்குள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைக்க பெற்றிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் என்பது கடந்த ஆண்டு திருச்சியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து கரூர் சம்பவத்திற்கு பிறகாக மக்கள் சந்திப்பு உள்ளரகத்தில காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பாக நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து மக்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகள் சந்திப்பை மேற்கொள்வதற்கு தமிழக வெற்றி கழகம் பல்வேறு அட்டவணைகளை தயார் செய்திருக்கிறது.
அந்த அடிப்படையில அடுத்த கட்டமாக விஜயின் மக்கள் சந்திக்கும் நிகழ்வு தஞ்சாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முடிந்தவரை இதை மக்கள் சந்திப்பாக மீண்டும் நடத்தவே திட்டமிட்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் காவல்துறையுடைய கட்டுப்பாடுகள் நெறிமுறைகளுக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்வாக அல்லது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வாக நடத்தப்படுமா என்பது தெரியவரும். முதற்கட்டமாக அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பழி வாங்கணுமா? பனையூருக்கு வரட்டா? விஜய்க்கு சவால் விட்ட ஜூலி..!!
இந்த நிகழ்ச்சிக்கான தேதி மார்ச் இரண்டாவது வாரத்திற்குள்ள முடிவு செய்ய வேண்டும் என தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் இடத்தை
தேர்வு செய்து தேதியை முதற்கொண்டு காவல்துறையிடம் விண்ணப்பித்ததற்கு பிறகே இது மக்கள் சந்திப்பா அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமா என திட்டமிடப்படும். இப்போது வரையில அடுத்த கட்டமாக தஞ்சையில் அவர் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் என்பது தமிழக வெற்றி கழகத்துடைய வட்டார தகவலாக இருக்கிறது.
இதையும் படிங்க: “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய் ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!