தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்ற நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சொந்தக் காசில் சூனியம் வைச்சிக்கிட்ட விசிலடிச்சான் குஞ்சுகள்.. தவெகவுக்கு போலீஸ் வைத்த ஆப்பு...!

சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்தாலும் கோவை விமான நிலையத்திலிருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கும் விஜய் சென்று வரவே 5 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜயை பார்த்தனர். பூத் கமிட்டி மாநாட்டுக்கு ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயை பார்ப்பதற்காகவே கோவையில் திரண்டனர்.

கோவை கொடுத்த வரவேற்பில் அடுத்ததாக சேலம், சென்னை, நெல்லை, மதுரை என அடுத்தடுத்த மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக மதுரையில் விஜய் பூத் கமிட்டி மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் தற்போது இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 3வது வாரத்தில் விஜயின் மாநாடு நடக்க இருப்பதாகவும் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பயணங்களுக்கு தனி விமானத்தை பயன்படுத்தும் விஜய்.. தலை சுற்ற வைக்கும் அதன் வாடகை!!