அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் கட்சி இணையாது அப்படிங்கிற தகவல் உறுதியாகியுள்ளது. இருந்தாலுமே கூட திமுகவை விழுத்தணும் அப்படிங்கிற நிலைப்பாட்டில உறுதியாக இருப்பதை அவருடைய பேச்சுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் மெகா கூட்டணிங்கிற ஒரு விஷயத்துல விஜய் பிடிவாதமா இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படின்னா எந்தெந்த கட்சிகளை அவர் அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த அளவில் அதனுடைய தலைவர் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் விமர்சித்து வருகிறார். தவெக ஆரம்பித்ததில் இருந்தே அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வர உள்ள 2026 தேர்தலை சந்திக்கும் எனக்கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தவெக அடம்பிடித்ததால் எடப்பாடி பழனிசாமி உங்க கூட்டணியே வேண்டாம் என உதறித்தள்ளியதாகவும் செய்திகள் வெளியாகின. வேண்டுமென்றால் துணை முதல்வர் தருவதாக அதிமுக இறங்கி வந்ததாகவும் ஆனால் முதல்வர் தவிர வேறு எதுவும் வேண்டாம் என விஜய் விடாப்பிடியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

இதனிடையே, அமித் ஷா தலையீட்டால் அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடும் அப்செட்டிற்கு ஆளானது தவெக. ஒரு பக்கம் விசிக திருமாவளவனும் திமுக கூட்டணியுடன் தான் தொடர்வேன் என கட் அண்ட் கறாராக சொல்லிவிட்டார். இதனால் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியை அசைக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது, மற்றொருபுறம் அதிமுக கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? எனத் தெரியாத தேமுதிக, பாமகவை உள்ள இழுக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. என்ன தான் ஆட்சியில் பங்கு என விஜய் பேசினாலும், தவெகவின் சீனியர் கட்சிகளான தேமுதிகவும், பாமகவும் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பது சந்தேகமே. இதனால் விஜய் புதிதாக கூட்டணி அமைத்து 2026 தேர்தலை சந்திக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: அரசியலில் நான் விஜய்-க்கே சீனியர்... அனல் பறக்க பேசிய விஜய பிரபாகரன்!!