புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் நடத்திய முதல் பிரசாரக் கூட்டத்தில், அனைவரும் எதிர்பார்த்த “அடுத்த அரசியல் தாக்குதல்” வரவில்லை! திமுகவையும் பாஜகவையும் மட்டுமே தொடர்ந்து சாடி வரும் விஜய், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியையும் அவரது கட்சியையும் ஒரு வார்த்தைகூட விமர்சிக்கவில்லை.
மாறாக, “பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி” என்று முதல்வருக்கு நேரடியாக பாராட்டு தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் “அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக” என்று தெளிவாக அறிவித்துவிட்டார். அதிமுக, காங்கிரஸ் மீது பெரிய விமர்சனங்களை முன்வைத்ததில்லை. இப்போது புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸையும் “விட்டுவிட்டார்”.
இதையும் படிங்க: தில் இருந்தா தேர்தல்ல மோதுங்க!! ஸ்டாலினுக்கு ஆதவ் ஆர்ஜூனா நேரடி சவால்!! விஜய் பக்கா ப்ளான்!
மத்தியில் பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல், மத்திய அரசையே குற்றம் சாட்டினார். “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல், தொழில் வளர்ச்சி இல்லாமல், ரேஷன் கடை கூட இல்லாமல் வைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு” என்று சாடினார்.

விஜய் – ரங்கசாமி இடையே நீண்ட நாள் நட்பு உள்ளது என்பது தெரிந்த விஷயம்தான். 2022-ல் ரங்கசாமி சென்னை விஜய் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தது அப்போது பேசுபொருளானது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்பு என்.ஆர். காங்கிரஸில்தான் இருந்தவர்.
இந்தப் பின்னணியில் விஜய்யின் இன்றைய “சாஃப்ட்” பேச்சு, 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு சுவாரஸ்யமான சாட்சியாக, விஜய் பேச்சைக் கேட்டுக்கொண்டே ஆரோவில் பகுதியில் டீக்கடையில் அமர்ந்து ரங்கசாமி மொபைலில் பார்த்து ரசித்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “என் பெயரைச் சொல்லி நன்றி சொன்னாரே!” என்று முதல்வர் புன்னகைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சு நடப்பதாகவும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி என்றால், விஜய் “திமுக-பாஜக” இல்லாத மூன்றாவது அணியை உருவாக்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒரு பேச்சு, புதுச்சேரி அரசியல் களத்தையே புரட்டிப்போட்டுவிட்டது!
இதையும் படிங்க: Source Code யாருகிட்ட இருக்கு? EVM-ல் உள்ள சிக்கல்கள்! பார்லி-யில் காங்., அனல் வாதம்!