மின்சிக்கன வாரத்தை முன்னிட்டுமின்வாரியம் சார்பில் பெரம்பலூர் இன்று நடைபெற்ற மின்சிக்கன விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை,பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று தெடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் குடும்பத்
தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒன்றி பாஜாக அரசு தான் நிதி வழங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் கூறுவது முற்றிலும் பொய்யானது என்றார்.
மேலும் மாநில அரசின் மக்கள்நலத்திட்டங்களான கல்வி நிதியாகட்டும், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களாகட்டும் அனைத்திற்கும் ஒன்றிய அரசு நிதி வழங்க மறுத்து வரும் நிலையிலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு உரிமை கொண்டாட நினைப்பது முற்றிலும் ஏமாற்று வேலை என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் வரியின் மூலம் வரும் நிதியை பெறுவதில் மட்டுமே பாஜாக அரசு மும்மரமாக செயல்படுவதாக தெரிவித்த அவர் ஒன்றிய அரசின் பெயரில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு வரும் பிரதமர் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கும் பெருமளவு நிதியை தமிழ்நாடு அரசுதான் வழங்கி வருகிறது என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மிரட்டல்!! அமளியால் முடங்கியது பார்லிமெண்ட்! பாஜக - காங்., வாக்குவாதம்!
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் நிதி நிறுவன அமைப்புகள் மின்வாரியத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை வழங்காமல் தாமதம் செய்து வந்த நிலையில், தற்போது அந்த நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மின்மாற்றிகள் பெற டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் விரைவில் தடைபட்டிருந்த புதியதுணைமின்நிலைய பணிகள் அனைத்தும் முடுக்கிவிடப்படும் என்றார்.
மாதம் தோறும் மின்கட்டணம் என்ற திட்டம் தொடர்பான கேள்விக்கு, Smart meeter எனப்படும் டிஜிட்டல் மின் அளவீட்டு கருவிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது அந்த மீட்டர்கள் அனைத்து வீடுகளுக்கும் பொருத்தப்பட்ட பிறகு மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்பது நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்வாரியம் தற்போது படிப்படியா நலிவிலிருந்து மீண்டு வருவதால் அது சரியானவுடன் மிக விரைவில் மின்வாரிய ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான குடியிரும்புகள் புணரமைப்பு பணி நடைபெறும் என்றார்.
அரசுபோக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துடனர் காலி பணியிடங்களை நிரப்பிட தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறை வுற்ற பிறகு கூடிய விரைவில் காலம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதா தெரிவித்தார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2026- தேர்தல் பிரச்சாரத்தை தலைமையேற்று முன் நின்று நடத்துவார் என்றும் அமைச்சர் சா.சி சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல்: பாமக-வில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!