• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழாவில் விஜய் சொன்ன 1967, 1977 ஆண்டுகளுக்கு முன்பாக என்ன நடந்தது?
    Author By Jagatheswari Thu, 27 Feb 2025 08:51:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will-repeat-1967-1977-election-result-in-2026-as-vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய், “நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். ஏன் இருந்தால் என்ன?. அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும், எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967லிலும், 1977லிலும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.” என்று பேசினார்.

    2026 Assembly Election

    இதில் விஜய் சொல்வதில் உண்மை அடங்கியிருக்கிறது. அதாவது,1967இல் திமுக வெற்றி பெற்றபோது அக்கட்சியின் இளைஞர்கள் அக்கட்சியின் பின்னால் திரண்டார்கள் என்பது உண்மையே. அதற்கு முன்பாக 1965இல் இந்தித் திணிப்பு போராட்டம் தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்தப்போது அந்தப் போராட்டத்துக்கு ஊன்றுகோலாக திமுக இருந்தாலும், அன்றைய இளைஞர்களும் முக்கிய காரணம். இளைஞர்களை ஒருங்கிணைக்க திமுக அன்று படிப்பகங்களையும் கையில் எடுத்தது. அந்த வகையில் 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு இளைஞர்களின் ஆதரவுக் கிடைத்தது.

    இதையும் படிங்க: விஜய்க்கு அடி பலமா இருக்கும்..! விசிக இல்லாமல் அரசியல் நகர்வே இல்லை: திருமா கர்வம்..!

    2026 Assembly Election

    அப்போது காமராஜரை வீழ்த்த ராஜாஜியும் அண்ணாவுக்கு துணை நின்றார். 1967இல் திமுக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெற்ற முதல் மாநிலக் கட்சி என்கிற பெருமையும் திமுகவுக்குக் கிடைத்தது.
    ஆனால், அதற்கு முன்பே தமிழகத்தில் திமுக காங்கிரஸுக்கு எதிராக பெரிய வளர்ச்சியைக் கொண்டிருந்த கட்சியும்கூட. 1949இல் தொடங்கப்பட்ட திமுக, 1957 தேர்தலில்தான் போட்டியிட்டது. 1957இல் முதல் தேர்தலிலேயே 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 1962இல் நடைபெற்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்படிப் படிப்படியாக முன்னெறிதான் 1967இல் திமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    2026 Assembly Election
    இதேபோல 1977இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றபோது திமுகவில் இருந்த ஏராளமான இளைஞர்கள் எம்.ஜி.ஆர். பக்கம் வந்தனர். அதற்கு முன்பே எம்.ஜி.ஆர். 1953 முதல் 1972 வரை சுமார் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தவர். தீவிர அரசியல்வாதியாக திமுகவுக்குப் பணியாற்றியவர். அதனால், திமுக என்கிற கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது ஏராளமானோர் அவர் பின்னால் அணிவகுத்தனர்.

    அதைவிட 1972இல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய பிறகு 1973இல் நடைபெற்ற  திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அன்றைய ஆளுங்கட்சியான  திமுகவை அதிர்ச்சியடைய வைத்தவர். 1975இல் காமராஜர் மறைந்தார். அன்று காமராஜர் ஆதரவாளர்களும், காமராஜரை வீழ்த்திய திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆரை ஆதரித்தனர்.அதன் தொடர்ச்சியாகவே 1977இல் நடைபெற்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி எம்.ஜி.ஆர். அரியணையில் அமர்ந்தார். 1967, 1977 தேர்தல்களுக்கு முன்பாக இவ்ளோ வரவாற்று நிகழ்வுகள் உள்ளன. 

    1967, 1977 ஆண்டுகளோடு விஜய்யின் இன்றைய அரசியல் பயணத்தை ஒப்பிட்டால், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது விளங்கும். 

    இதையும் படிங்க: ஆட்சியை பிடிங்க அடுத்த ஆண்டு வந்து தமிழில் முழுமையாக பேசுகிறேன்....பிரசாந்த் கிஷோர் பேச்சு

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share