தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமலை தொடங்கியதற்கு பிறகு அரபி கடல் மற்றும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரமடையும் எனக்கூறப்பட்டது. ஆனால் அது வலுவிழந்ததால் தமிழகத்தில் கனமழை பெய்வது சற்றே குறைந்தது. இந்த நிலையில் தற்பொழுது வங்கக்கடலில், அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING மக்களே உஷார்... உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா? ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறுமா? என்பது குறித்து அது நகரும் திசை மற்றும் தீவிர தன்மையை வைத்தே கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகரும் எனவும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அதன் நகர்வுகளை தீவிரமாக கண்கானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!